உலக சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி உலக சாதனை படைத்துள்ளது.
உலக சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு
Published on

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி உலக சாதனை படைத்துள்ளது. முதலமைச்சர் தொடங்கி வைத்த இந்த ஜல்லிக்கட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையில், சாதனை முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஆயிரத்து 353 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. 600 வீரர்கள் காளைகளை தழுவினர். இதைத் தொடர்ந்து உலக சாதனை அமைப்பின் உறுப்பினர்கள், அதற்கான சான்றிதழை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் விழாக் குழுவினரிடம் வழங்கினர். துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். சிறப்பாக விளையாடிய காளை மற்றும் காளையர்களுக்கு தலா ஒரு கார் பரிசளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com