Viralvideo|"நாங்க ஆட்சிக்கு வந்தா எல்லாரையும் வீசிடுவோம்.." - திமுக ஆபீஸில் நின்று வீடியோ போட்ட நபர்

"நாங்க ஆட்சிக்கு வந்தா எல்லாரையும் வீசிடுவோம்.." - திமுக ஆபீஸில் நின்று வீடியோ போட்ட நபர்

"நாங்க ஆட்சிக்கு வந்தா.. எல்லாரையும் வீசிடுவோம்.." - திமுக ஆபீஸில் நின்று மிரட்டல் வீடியோ போட்ட நபர் #viralvideo #dmk #viralvideo #tvk #thanthitv நாகர்கோயிலில் திமுக அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை திமுக ஆட்சிக்கு வந்தால் வீசி விடுவோம் என திமுக அலுவலகத்திற்கு உள்ளேயே நின்றபடி மது போதையில் பேசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ஒழுங்கினசேரி பகுதியில் அமைந்துள்ள திமுக அலுவலகம் அருகே தவெக கொடியுடன் வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய நபர்கள் தங்களுக்குள் மோதி கொண்டதோடு திமுக அலுவலகத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாந்த நிலையில் போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் விஜய் என்ற இளைஞர் மது போதையில் அதே திமுக அலுவலகத்திற்குள் நின்று கொண்டு திமுக அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை திமுக ஆட்சிக்கு வந்தால் வீசி விடுவோம் என கூறியிருந்தார். இதுதொடர்பான வீடியே வைரலான நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com