Viral Video``மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலா இது? அடேங்கப்பா..’’ - ஆச்சரியப்பட்டு வீடியோவை வைரலாக்கிய மக்கள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்ட கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதுகுறித்த காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மதுரை எய்ம்ஸ் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரதாப்ராவ் ஜாதவ், கடந்த மாதம் 30ம் தேதி நிலவரப்படி
42 சதவீத கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இதுவரை மத்திய அரசு 421 கோடி ரூபாயை விடுவித்துள்ளதாகவும், இத்திட்டத்தை 2026 அக்டோபருக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் கட்டுமான பணிகள் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
