தீயாய் பரவிய வீடியோ - ரூ.6 லட்சம் வாங்கிய SSI-க்கு பறந்த அதிரடி உத்தரவு
சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவரிடம், 6 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அஸ்தம்பட்டி பகுதியில், தமிழழகன் என்பவர் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை ஏமாற்றியதாக, முரளி என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த பிரச்சினையை முடித்து வைப்பதாக எஸ்.எஸ்.ஐ. சரவணன் என்பவர் கட்டப் பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழழகனிடம் பேசி 25 லட்சம் ரூபாயை பெற்றுத் தந்து, அதற்காக 6 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிக்கொண்டு சரவணன் ஏமாற்றியதாக, ஆணையர் அலுவலகத்தில் முரளி மீண்டும் புகார் அளித்துள்ளார். மேலும், 6 லட்சம் ரூபாய் வாங்கும் வீடியோ, தன் மீது புகார் அளித்தால், 3 மாதம் சஸ்பெண்ட் செய்வார்கள்... மீண்டும் பணிக்கு வந்துவிடுவேன் என்று எஸ்.எஸ்.ஐ. சரவணன் பேசிய வீடியோ வெளியானது. இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.