பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாவில் வைரல் ரீல்ஸ் - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
கரூரில், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ராமானுஜம் நகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் எடுப்பதுடன்,
பொதுமக்களை அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கோகுல கிருஷ்ணன், சுஜித் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், சூரியபிரகாஷ், கெளதம் ஆகியோரிடம் ஆயுதங்களை கொடுத்துள்ளதாக அவர்கள் கூறினர். அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.
Next Story
