Kodaikanal | Safetyworks | தீயாய் பரவிய குணா குகை ரீல்ஸ் ...வனத்துறையினர் எடுத்த அதிரடி முடிவு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகையில் கூடுதலாக தடுப்பு கம்பிகள் அமைத்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். குணா குகை சுற்றுலா தளத்தில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில், சில இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் நுழைவுக் கம்பியை தாண்டிச் செல்கின்றனர். இது குறித்து புகார் எழுந்த நிலையில், தடுப்பு கம்பிகளில் கூடுதலாக, இரும்பு வலைகளும், சில இடங்களில் கூடுதல் கம்பிகளும் இணைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story
