விசிகவினர் - போலீசார் இடையே பயங்கர தள்ளுமுள்ளு.. சுங்கச்சாவடியில் திடீர் பரபரப்பு
சுங்கச்சாவடியில் தகராறு - விசிகவினர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு
விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் விசிகவினருக்கும் தகராறு ஏற்பட்டதில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசிக நிர்வாகி கார்மேகம் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதாக தெரிகிறது. அப்போது சுங்கச்சாவடி கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். தொடர்ந்து போலீசாருடன் விசிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Next Story
