Dindigul பஜனை பாடல் பாடியபடி பள்ளிவாசலை கடந்த விநாயகர் ஊர்வலம் - பெரும் படையாக காவல் நின்ற போலீஸ்

Dindigul பஜனை பாடல் பாடியபடி பள்ளிவாசலை கடந்த விநாயகர் ஊர்வலம் - பெரும் படையாக காவல் நின்ற போலீஸ்

#dindigul #pallivasal #vinayagarchaturthi

திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் வழியாக சிலை கொண்டு செல்லப்பட்டபோது, பள்ளிவாசல் முன்பாக தாரை தப்பட்டைகள் இசைக்காமல், பஜனை பாடல்கள் பாடியபடி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக, அப்பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக பல ஆண்டுகளாக சர்ச்சை நிலவி வந்த நிலையில், பொதுமக்கள் சார்பில் ஒரு சிலையை மட்டும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பள்ளிவாசலை கடந்து யானைத்தொப்பம் சென்றதும் மீண்டும் தாரை தப்பட்டைகள் முழங்க, ஊர்வலம் கோட்டை குளத்தில் நிறைவடைந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com