விநாயகர் சிலைகளுக்குள் விதைகளை புதைத்து இளைஞர் புது முயற்சி..!

சேலம் இளைஞர் ஹரிநாராயண‌ன் இயற்கையை காக்க விநாயகர் சிலை தயாரிப்பில் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளார்.

விநாயகர் ச‌துர்த்தி விழா நெருங்கி வருவதால் விநாயகர் சிலைகளை தயாரிப்பவர்கள் புதுப்புது விநாயகர்களை செய்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த ஹரி நாராயண‌ன் என்ற இளைஞர் புதுமையுடன் சேர்ந்து இயற்கையை காக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

கிழங்கு மாவு, காகித கூழ் என இயற்கை பொருட்கள் கொண்டே சிலை தயாரித்துவரும் இவர் தற்போது விநாயகர் சிலைகளுக்குள் விதைகளை புதைத்து வைக்கிறார். எனவே, விநாயகர் சிலை கரைக்கப்படும்போது மரமோ, செடியோ உருவாகும் என ஹரி நாராயண‌ன் நம்பிக்கை தெரிவிக்கிறார். வாடிக்கையாளர்களும் இந்த ஹரி நாராயண‌னின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com