கோவையை அடுத்த சாடிவயல் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுயம்பு மற்றும் வெங்கடேஷ் யாணைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சுயம்பு மற்றும் வெங்கடேஷ் யானைகளுக்கு சந்தன பொட்டு அலங்காரம் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு யானைகளுக்கும் வெல்லம் மற்றும் கரும்புகளை வனத்துறையினர் வழங்கினர்.