விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்..Vintage டூ Trending வரை

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சேலம் ஓமலூரில், பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வரும் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஒமலூர் பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் களிமண், பேப்பர் கூழ், கிழங்கு மாவு கூழ், தேங்காய் நார் உள்ளிட்ட இயற்கை பொருட்களை பயன்படுத்தி சிலைகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் விநாயகர் சிலை, விநாயகருடன் பாரத மாதா சிலை, காளைமாடு மேல் அமர்ந்துள்ள விநாயகர், என பல்வேறு புதிய சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com