Vilupuram|நாப்தலின் உருண்டையை சாப்பிட்ட பள்ளி சிறுமிகள் - வாந்தி, மயக்கம்.. விழுப்புரத்தில் பரபரப்பு

x

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டையை சர்க்கரை என நினைத்து சாப்பிட்ட பள்ளி சிறுமிகளின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

அன்னியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் எட்டு சிறுமிகள், பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டையை சர்க்கரை என நினைத்து சாப்பிட்டுள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய இவர்கள் அனைவருக்கும் லேசான மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது நலமுடன் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்