பைக் ஓட்டி வந்தவர் மீது போலீசார் தாக்குதல் : பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த பெண் கீழே விழுந்து பலி

விழுப்புரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் தாக்கியதில் பின்னால் அமர்ந்து வந்த வயதான பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பைக் ஓட்டி வந்தவர் மீது போலீசார் தாக்குதல் : பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த பெண் கீழே விழுந்து பலி
Published on

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் தன் தாயார் அய்யம்மாளை இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் எதிரில் வந்த போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், செந்தில் வாகனத்தை நிறுத்துமாறு அடித்ததாக கூறப்படுகிறது. இதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த அய்யம்மாள் கீழே விழுந்து, தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செந்தில் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இதனால் கச்சராயபாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com