நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி - ஈசிஆரில் பரபரப்பு | ECR | Swimming Pool

x

ஈசிஆரில் சொகுசு விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரியும் சுஷாந்த் தோபால், தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு , விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் தனியார் நட்சத்திர விடு​தியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். சுஷாந்தின் 5 வயது பெண் குழந்தை, அங்குள்ள குழந்தைகளுக்கான நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென நீரில் மூழ்கியது. இதனை பார்த்து தந்தை நீந்தி வருவதற்குள் குழந்தை நீரில் மூழ்கி இறந்தது. இது ​தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்