ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை
விழுப்புரத்தில் ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் ஆயுதப்படை 2ஆம் நிலை காவலராக வேலை பார்த்து வந்தவர் ஏழுமலை. இவர் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இதனிடையே இன்று காலை அந்த வீட்டில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்கவே, போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஏழுமலையின் சடலத்தை மீட்ட போலீசார் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பணிக்கு சேர்ந்த ஏழுமலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
