10 ஆம் வகுப்பு மாணவன் கழுத்து அறுத்து கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 ஆம் வகுப்பு மாணவன் கழுத்து அறுத்து கொலை
Published on
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த அயன்குஞ்சுரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவர் சவுதியில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது குடும்பத்தினர் சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில்,10 ஆம் வகுப்பு படித்துவரும் அவரது மகன் சிவக்குமார், நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்று, மாலை வரை திரும்பாததால் தாய் உள்ளிட்ட உறவினர்கள் அவரை தேட தொடங்கியுள்ளனர்.இந்நிலையில், அந்த ஊரில் ஒதுக்குபுறமான அடர்ந்த காட்டுப் பகுதியில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் சடலமாக கிடந்துள்ளான்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை வெளிநாட்டில் இருக்கும் நிலையில், மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com