இதான் ரூ.10 லட்சத்துக்கு போட்ட ரோடா? - மிதிக்க மிதிக்க உதிர்ந்த தார் சாலை.. கொதித்த மக்கள்
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கே.கே. நகர் பகுதியில் 220 மீட்டர் நீளமான தார் சாலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த தார் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளனர். 10.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட இந்த சாலை மண்சாலையை போல் தரமற்று இருப்பதால், தரமான சாலையை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story