புயல் பாதிப்பை பார்க்க வராததால் அதிருப்தி - குடும்ப அட்டையை ஒப்படைக்க முடிவு செய்த கிராம மக்கள்

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் அளிக்க வந்ததால் பரபரப்பு.
புயல் பாதிப்பை பார்க்க வராததால் அதிருப்தி - குடும்ப அட்டையை ஒப்படைக்க முடிவு செய்த கிராம மக்கள்
Published on

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினம் காந்தி நகரில் 300 குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கஜா புயலால் இந்த கிராமம் மிகுந்த சேதமடைந்ததாகவும், முறையான மீட்பு பணியும், நிவாரண பணிகளும் செய்து கொடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தங்கள் பகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com