புதிய பள்ளி கட்டடம் அமைத்து தரக் கோரி சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

சிவகங்கை அருகே புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வலியுறுத்தி கிராம மக்கள் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பள்ளி கட்டடம் அமைத்து தரக் கோரி சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
Published on

"சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்"

அங்குள்ள திருவேலங்குடி காரம்பட்டி கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களை சேர்ந்த 100 மாணவர்கள், சுமார் 8 கிலோ மீட்டர் பயணம் செய்து, பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால் சிரமம் ஏற்படுவதாக கூறி, தங்கள் கிராமத்திலேயே பள்ளி கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் மனு அளித்தனர். ஆனால் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், சமையல் செய்யும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மரத்தடியில், மாணவர்கள் வகுப்பறை நடத்தி, ஆசிரியர்கள் போல் பாடம் நடத்தி காட்டினர்.

X

Thanthi TV
www.thanthitv.com