மர்ம காய்ச்சலால் முடங்கிய கிராமத்தினர்...

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே மர்ம காய்ச்சலால் வீட்டுக்குள்ளேயே முடங்கிய கிராம மக்கள்.
மர்ம காய்ச்சலால் முடங்கிய கிராமத்தினர்...
Published on
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே மர்ம காய்ச்சலால், வீட்டுக்குள்ளேயே முடங்கிய கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அழகமாநகரி கிராமத்தில், கடந்த 15 நாட்களாக, 50க்கும் மேற்பட்டோர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கை, கால், மூட்டு வீக்கம் மற்றும் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் பரவி வரும் நிலையில், சுகாதார துறையினர் பெயரளவில், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வலியுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com