பாடியை இறக்கியபோது உயிரோடு எழுந்ததால் விழுப்புரத்தில் அதிர்ச்சி...
விழுப்புரம் மாவட்டம் தோகைபாடி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், பிரகாஷிற்கு உடல் நிலை மோசமடைந்து மயக்க நிலையில் உறவினர் பரிமளம் என்பவரின் உதவியுன் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு பிரகாஷ் அழைத்து வரப்பட்டார், வரும் வழியில் பிரகாஷ் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் பரிமளம் தெரிவித்த நிலையில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது, இந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்து பிரகாஷை இறக்க முற்பட்ட போது அவர் கண் விழித்ததால் ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர் ஒருவர் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் இறுதி சடங்கிற்கு தயாரான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
Next Story
