தொடரும் மணல் கொள்ளை - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல்லில் இரவு பகலாக தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தொடரும் மணல் கொள்ளை - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published on
திண்டுக்கல் மாவட்டத்தில் சந்தனவர்த்தினி, குடகனாறு, உள்ளிட்ட ஆறுகள் பாய்ந்தாலும், இந்த ஆறுகளில் போதிய நீர் இல்லாததால் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை அதிக அளவில் நடக்கிறது. குறிப்பாக நத்தம், கோபால்பட்டி , பிள்ளம நாயக்கன்பட்டி, முள்ளிப்பாடி உள்ளிட்ட இடங்களில் ஆற்று ஓரங்களில் உள்ள விவசாய நிலங்களை குறிவைத்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், சவுடு மண் அள்ளுவதாக கூறி விவசாய நிலங்களில் உள்ள தரமான களிமண்ணையும் மணலையும் இரவு பகலாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அள்ளி கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com