"அந்த வைப்ரேஷனால் வீட்டுக்குள்ள பாம்பு வருது.." - பீதியில் மக்கள் சொன்ன ஷாக் தகவல்
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே என்எல்சி 2-ஆவது சுரங்க விரிவாக்கப் பணி நடைபெற்று வரும் நிலையில், கரிவெட்டி கிராமத்திற்கும் செல்லும் சாலையை துண்டிக்க முயன்ற என்எல்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். தங்கள் கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீட்டுத் தொகையும், வேலையும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். விரிவாக்கப் பணிளகால் தங்கள் கிராமம், வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறி வருவதாகவும், என்எல்சி நிர்வாகம் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்காமல் கிராம மக்களை வெளியேற்ற முயற்சி செய்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
Next Story