விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ மரணம் : இன்று மாலை சொந்த ஊரில் இறுதிச் சடங்கு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ மரணம் : இன்று மாலை சொந்த ஊரில் இறுதிச் சடங்கு
Published on
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த, திமுக எம்எல்ஏ ராதாமணி, சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல், ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கண்டமங்கலம் ஒன்றியம் கலிஞ்சி குப்பம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளும், பொன்முடி உள்ளிட்ட திமுகவினரும் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. எம்எல்ஏ ராதாமணி மறைவை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் திமுக வின் பலம் தற்போது 100 ஆக குறைந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com