கைக்கு வந்த விஜய்யின் பிரசார வாகனம் - ஓட்டிப்பார்த்த அதிகாரிகள்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தை இயக்கி சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் என பல்வேறு நபர்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில், டிஜிட்டல் சர்வே கருவியைக் கொண்டு சாலைகளின் இருபுறங்களிலும் அளவெடுக்கும் பணியானது துவங்கி நடைபெற்றது.
முன்னதாக சிபிஜ அலுவலகத்திற்கு பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட விஜய்யின் வாகனத்தை வரவழைத்த அதிகாரிகள் அதனை இயக்கி ஆய்வு செய்தனர்.
