விஜய் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள் வழங்கிய தவெகவினர்

x

விஜய் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள் வழங்கிய தவெகவினர் ஒருநாள் முழுவதும் பேருந்தில் இலவச பயணம் - தவெகவினர் ஏற்பாடு மாணவர்களுக்கு கல்வி உதவி பொருட்கள் வழங்கிய தவெகவினர்

தவெக தலைவர் விஜயின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஒரு நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பொதுமக்கள் பயணிக்க, கோவை மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

கோவை மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பிறந்தநாளையொட்டி, மாநகரில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் வழங்குவது, மருத்துவ முகாம், ரத்த தான முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டன.

தொழில் தொடங்குவதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கியதோடு, இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

துடியலூர் முதல் இடிகரை வரை பொதுமக்கள் இன்று இலவசமாக பயணிக்க கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். பேருந்தில் பயணித்தவர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட செயலாளர் சம்பத்குமார், இனிப்புகளும் வழங்கினார்.

பெரியநாயக்கன் பாளையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் பேசிய மாவட்ட செயலாளர் சம்பத்குமார், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, இன்று விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடி வருவதாகவும், அடுத்த வருடம் அரசு விழாவாக அனைத்து இடங்களிலும் கொண்டாடும் நிலை வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்களுக்காக பல நூறு கோடிகளை தூக்கி வீசிவிட்டு களத்திற்கு வந்தவர் விஜய் என்றும், கடந்த 15 ஆண்டுகளாக நற்பணிகளை செய்துதான் கட்சியை ஆரம்பித்து களத்திற்கு வந்திருக்கிறார் என்றும் கூறிய சம்பவத்குமார், மக்கள் அவரை முதலமைச்சராக நிச்சயம் அமர வைப்பார்கள் என்றும் உற்சாகத்துடன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்