விஜய் பிறந்தநாள் - குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு

x

விஜய் பிறந்தநாள் - குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு

தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் அன்று கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்ட நிர்வாகி சம்பத்குமார் ஏற்பாட்டில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கும் நிகழ்வை கோவை மாவட்ட தவெகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல 22ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகள் பிறந்த நிலையில், அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரத்தை அணிவித்து தவெகவினர் விஜயின் பிறந்தநாளை கொண்டாடினர்.

குறிப்பாக மக்கள் இயக்க நிர்வாகியாக இருந்து தற்போது கோவை மாநகர மாவட்ட செயலாளராக பதவி வகிக்கும் சம்பத்குமார், வருடம் தவறாமல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்