"விஜய் வருகை.. யாருக்கு நஷ்டம்?" நயினார் சொன்ன நறுக் பதில்

x

தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணிக் கட்சிகளுடைய ஆட்சி அமையும். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ​தெரிவித்துள்ளார். திருவாரூரில் பேசி நயினார் நாகேந்திரன், தேமுதிகவும் எங்களுடன் கூட்டணியில் இருக்க வேண்டும், அப்போது தான் திமுகவை வெற்றி பெற முடியும் என்றார். மேலும், முருகர் பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் எவ்வளவு தடங்கல்கள் ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு தடங்கல்கள் ஏற்படுத்துகிறார்கள். காரணம் திமுக தோல்வி பயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என பேசினார். அத்துடன் விஜய்யின் அரசியல் வருகை யாருக்கு லாபம், நஷ்டம் என்பது தேர்தல் முடிந்த பின்பு தான் தெரியும். திமுகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்