

இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு, வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் வெற்றிக்காக பாடுபட்ட தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறந்த முறையில் பிரசாரம் செய்ததற்காக தமக்கும் பிரமலதாவிற்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சர் நன்றி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.