தொடங்கிய விஜயதசமி வித்யாரம்பம்..கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் குழந்தைகளோடு குவிந்த பெற்றோர்

உலக பிரசித்தி பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் விஜயதசமி விழா கோலாகலம்... நெல்மணிகளில் அ எழுதி வைத்து குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் செய்த பெற்றோர்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட கூத்தனூரில் கல்வி தெய்வமாம் சரஸ்வதி தேவிக்கு என்று தென் இந்தியாவிலேயே தனி ஆலயம் அமையப்பெற்ற ஒரே மகா சரஸ்வதி ஆலயம் இங்கு அமைந்துள்ளது. இந்த கோவிலில் விஜயதசமி விழாவை முன்னிட்டு நெல்மணிகளில் வித்யாரம்பம் என்னும் தமிழ் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை எழுதி கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது.

இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.. பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com