விஜய் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் ஊழியர் படுகாயம்

நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விஜய் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் ஊழியர் படுகாயம்
Published on
நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெயரிடப்படாத இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வரும் நிலையில், இந்த படத்துக்கான செட் அமைக்கும் பணி பூந்தமல்லி அடுத்த ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இதனிடையே 100 அடி உயர கிரேனில் அதிக வெளிச்சம் கொண்ட மின்விளக்குகள் அமைக்கும் பணியில் சாலிகிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஈடுபட்டு வந்தார். அப்போது திடீரென 100 அடி உயரத்தில் கட்டப்பட்டு இருந்த மின் விளக்கு கழன்று செல்வராஜ் தலை மீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ், போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com