இந்த மாவட்டத்திலும் விஜய் பிரச்சாரம்?
இந்த மாவட்டத்திலும் விஜய் பிரச்சாரம்? அனுமதி கோரி மனு
த.வெ.க தலைவர் விஜய்யின் பரப்புரைக்காக, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மனு அளித்தார். திருச்சி மாவட்டத்தில் இருந்து தனது பரப்புரையை தொடங்க உள்ள த.வெ.க தலைவர் விஜய், பின்னர் பெரம்பலூரில் பொது மக்களை சந்தித்து பரப்புரை நிகழ்த்த உள்ளார். இதற்காக அனுமதி வேண்டி, அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளரை சந்தித்து அனுமதி கேட்டு மனு அளித்த ஆனந்த், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கிளம்பிச் சென்றார்.
Next Story
