

கடந்த 2015ஆம் ஆண்டு மார்தாண்டம் - கட்டியபட்டணம் வழிதடத்தில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குபடி, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தான் தூண்டியதால் தான் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக வழக்குப்பதிவு செய்து இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தனக்கு அந்த சம்பவத்தில் தொடர்பில்லை என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, இந்த வழக்கில் இருந்து எம்.எல்.ஏ. விஜயதாரணியை விடுவித்து உத்தரவிட்டார்.