லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை - வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரி மரணம்

இதனிடையே, கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையின் போது வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை - வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரி மரணம்
Published on

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த சோதனையில் கணக்கில் காட்டாத பணம் சிக்கி உள்ளது. இதையடுத்து, அதிகாரி முதல் அடிமட்ட ஊழியர் வரை அனைவரையும் வெளியே செல்ல அனுமதி மறுத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அனைவரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது, பாபு என்ற வாகன ஆய்வாளருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உயிர் பிரிந்தது. இந்த சம்பவம், வட்டார போக்குவரத்துத்துறை வட்டாரங் களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com