BSF Train Viral Video | BSF வீரர்கள் எடுத்து வெளியிட்ட வீடியோ - நாடே அதிர்ச்சியில்..

x

அமர்நாத் யாத்திரையின் பாதுகாப்புக்காக செல்லும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பயணத்திற்கு பாழடைந்த நிலையில் உள்ள ரயில் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை அடுத்த மாதம் மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், அமர்நாத் யாத்திரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக சுமார் ஆயிரத்து 200 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த நிலையில், வீரர்கள் பயணிக்கும் ரயில், பாழடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் பாதுகாப்பு பணியில் பெரும் பங்கு வகிக்கும் எல்லை பாதுகாப்பு படையினர் பயணிக்க இத்தகைய மோசமான ரயில் வழங்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ரயிலின் ரேக் மாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்குக் காரணமான நான்கு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்