வீடியோவால் வெடித்த சர்ச்சை - பிரேவிஸ் விவகாரம் - ஓப்பனாக போட்டு உடைத்த அஸ்வின்

x

டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் எடுத்தது தொடர்பாக அஸ்வின் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார். தான் பேசிய வீடியோவில் பிரேவிஸின் ஆட்டத்தையும், சிஎஸ்கே அவரை சரியான நேரத்தில் ஒப்பந்தம் செய்தது ஒரு "மாஸ்டர் ஸ்ட்ரோக்" எனவும் குறிப்பிட்டதாக கூறினார். ஆனால்,

சிலர் வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் பார்த்து விட்டு திரித்து கூறுவதாக தெரிவித்துள்ளார். பிரேவிஸை சிஎஸ்கே நிர்வாகம் எந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்தார்கள் என்பது தனக்கு தெரியாது என்றும், சில அணிகள் ஆர்வம் காட்டிய சூழலில் சிஎஸ்கே அவரை எடுத்தது குறிப்பிடத்தக்கது என்றும் கூறியுள்ளார். இதில் வீரர் தரப்பு, அணி மற்றும் ஐபிஎல் நிர்வாகம் என யார் மீதும் தவறு இல்லை" எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்