Pudukottai | புதுகை காவல்துறை வெளியிட்ட வீடியோ... மக்களே உங்கள் கவனத்திற்கு

புதுகை காவல்துறை வெளியிட்ட வீடியோ... மக்களே உங்கள் கவனத்திற்கு

#pudukottai | #policestation புதுகை காவல்துறை வெளியிட்ட வீடியோ... மக்களே உங்கள் கவனத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் புகார் அளித்த 7 நாட்களுக்குப் பிறகு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் புதிய நடைமுறையை மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா உத்தரவின்பேரில், இதற்காகத் தனி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் பொதுமக்களிடம், 7 நாட்களுக்குப் பிறகு குறிப்பிட்ட எண்ணிலிருந்து தானியங்கி ஐ.வி.ஆர். (IVR) அழைப்பு மூலம் புகாரின் மீதான நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய டிஜிட்டல் கண்காணிப்பு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விளக்கக் காணொளியையும் மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ளது.

X