அண்ணாமலை வெளியிட்ட வீடியோ - ஞானசேகரன் தரப்பு எச்சரிக்கை அறிவிப்பு

x

அண்ணாமலை மீது வழக்கு தொடர நடவடிக்கை" - ஞானசேகரன் தரப்பு அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை வைத்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அரசியல் செய்வதாகவும், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் ஞானசேகரன் தரப்பு வழக்கறிஞர் முருகவேல் கூறியுள்ளார். ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது தாய் கங்காதேவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த வழக்கில், ஞானசேகரனுக்கு மகளிர் நீதிமன்றம் அளித்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்றும் வழக்கறிஞர் முருகவேல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்