வாகனங்களை பார்த்ததும் பதுங்கிய புலி வைரலாகும் வீடியோ
உதகை அருகே சாலையோரம் பதுங்கியபடி நடந்து சென்ற புலியை பார்த்து சுற்றுலா பயணிகள் பிரம்மிப்படைந்தனர். மசினகுடியில் இருந்து மாயார் செல்லக்கூடிய சாலையில் சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்த போது திடீரென புலி ஒன்று தென்பட்டுள்ளது. வாகனத்தை பார்த்த புலி பதுங்கியபடி நடந்து சென்றதை சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்துள்ளனர். இதனிடையே பகல் நேரங்களில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் .
Next Story
