குடியரசு துணை தலைவர் தேர்தல் - எதிர்க்கட்சி தலைவர்களுக்கு போன் அடித்த ராஜ்நாத்சிங்
CM Stalin | Rajnath Singh | குடியரசு துணை தலைவர் தேர்தல் - எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வரிசையாக போன் அடித்த ராஜ்நாத்சிங்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர்களிடம், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆதரவு கோரியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்,
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பலரையும் ராஜ்நாத்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜூ ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும்
தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை ராஜ்நாத்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
