மூத்த நடிகர் ராஜேஷ் உயிரிழப்பு.. ஆசிரியர் டூ நடிகர் "அந்த 7 நாட்கள்" ராஜேஷின் வாழ்க்கை பயணம்

x

ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர் ராஜேஷ் மறைவு

கே.பாலச்சந்தர் இயக்குன அவள் ஒரு தொடர்கதை மூலமா திரையுலகத்துல காலடி எடுத்து வச்ச ராஜேஷ்... ஹீரோவா... வில்லனா...னு பல குணச்சித்திர வேடங்கள்ல நடிச்சு தன்னோட எதார்த்தமான நடிப்பால மக்கள் மனசுல இடம் பிடிச்சாரு...

அந்த 7 நாள்கள், மகாநதி, இருவர், நேருக்கு நேர், தீனா, சிட்டிசன், ரமணா, ரெட், சாமி, விருமாண்டி, ஆட்டோகிராஃப் அப்டினு பல வெற்றிப் படங்கள்ல ஆழமான நடிப்ப வெளிப்படுத்திருந்தாரு ராஜேஷ்...

எப்படிப்பட்ட கதாபாத்திரமா இருந்தாலும் அதுக்கு உயிர் கொடுக்கும் ராஜேஷோட நடிப்பு...

அரசியல், ஜோதிடம், மருத்துவம்னு பல துறைகள்லயும் ராஜேஷுக்கு ஆர்வம் அதிகம்...

இப்படி பன்முக திறமையாளரா இருந்த ராஜேஷோட மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்துல ஆழ்த்திருக்கு...

அவர் இந்த மண்ணுலகத்த விட்டு பிரிஞ்சாலும் காலத்தால் அழியாது அவருடைய கதாபாத்திரங்கள்...


Next Story

மேலும் செய்திகள்