வேங்கைவயல் வழக்கு - தமிழகம் முழுவதும் எகிறும் எதிர்பார்ப்பு
தமிழக அரசு தரப்பின் முறையீட்டால், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுமா என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு, சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் பொதுநல மனுக்களை விசாரிக்க வலியுறுத்தி தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு வழக்கறிஞர் முறையீடு செய்தார். இதை ஏற்று, நாளை (23/01/2025) வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. இந்த வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடித்து சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்களா? அல்லது வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா என தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 9எனினும், சிபிஐ விசாரணைக்கு அனுமதிக்கமாட்டோம் என ஏற்கனவே தமிழக அரசு தரப்பு கூறியிருந்ததால், வேங்கைவயல் விவகாரத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....
