வீர மங்கை வேலுநாச்சியார் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். நினைவு மண்டபத்திலும் பொதுமக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பேரணியாக வந்து வீர வணக்க முழக்கம் எழுப்பினர்.