Vellore | சொந்த ஊரான வேலூருக்கு வந்தததும் ராணுவ வீரருக்கு ஊரே திரண்டு செய்த பிரமாண்ட மரியாதை..

x

பணிநிறைவு பெற்ற ராணுவ அதிகாரிக்கு உற்சாக வரவேற்பு...

ராணுவத்தில் பணியாற்றி விட்டு, பணி நிறைவு பெற்ற சொந்த ஊர் திரும்பிய ராணுவ அதிகாரிக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேலூர் மாவட்டம் அம்முண்டி அடுத்த தொப்ளாமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராணுவ அதிகாரி மேஜர் சத்யம். கடந்த 32 ஆண்டுகளாக தேசத்திற்காக ராணுவ பணியாற்றி வந்த மேஜர் சத்யம் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார். சொந்த ஊர் திரும்பிய அவருக்கு, மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ஊர் மக்களுக்கு மேஜர் சத்யம், மணக்க மணக்க பிரியாணி விருந்து வைத்து தன் நன்றியை தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்