vellore || பந்தா காட்டி தகராறில் ஈடுபட்ட SI மகன் அதிர்ச்சி CCTV

x

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் வாங்கிய உணவுக்கு பணம் தராமல், ஹோட்டல் உரிமையாளருடன் எஸ்ஐயின் மகன் போதையில் தகராறு செய்துள்ளார். பள்ளிகொண்டாவில் பாபு என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், பெண் எஸ்.ஐயின் மகனான மனோஜ் என்பவர், மதுபோதையில் அந்த ஹோட்டலுக்கு சென்று உணவு வகைகளை வாங்கியுள்ளார். அதற்கு பணம் தர மறுத்து ஹோட்டல் உரிமையாளருடன் தகராறு செய்த மனோஜ், பெயர் பலகையை தூக்கி வீசி தாக்கியுள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்