Vellore | புரட்டாசி END .. தீபாவளி START.. மீன் மார்க்கெட்டில் அலைமோதும் Non-Stop கூட்டம்!
நாடு முழுவதும் விடிந்தால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட அதிக மக்கள் கூட்டம் உள்ளது. குறிப்பாக புரட்டாசி மாதம் முடிந்த பிறகு முதல் ஞாயிற்று கிழமை என்பதாலும், அதேபோல் நாளை தீபாவளி நாள் என்பதால் அதிகமான கூட்டம் காணப்படுகின்றது. குறிப்பாக வேலூரில் உள்ள மீன் சந்தைகளில், தீபாவளி பண்டிகையை ஒட்டி இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாவட்டத்தில் முக்கிய பகுதிகளாக இருக்கும் குடியாத்தம், அணைக்கட்டு, காட்பாடி போன்ற பகுதிகளில் உள்ள சிறிய கடைகளுக்கும் இங்கிருந்து மீன்கள் செல்கின்றது. இதனால் அதிகமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூடி மீன்களை வாங்கி வருகின்றனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகமான மக்கள் வாங்கி செல்வதாகவும் மேலும் இன்றை விட நாளை காலை கூட்டம் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ மீன் ரூ. 80 முதல் தொடங்கி ரூ. 1200 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்ற. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் சுமார் 5 டன் மீன்கள் விற்பனையாகும் என எதிர்ப்பார்க்க படுகின்றது.
