ஓட்டு போட வந்தவர்களிடம் போதையில் ஊராட்சி மன்றத் தலைவர் செய்த செயல்

வேலூரில், மதுபோதையில் போலீசாரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அணைக்கட்டு அருகே உள்ள வேப்பங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்தவர்களிடம், அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான நவகிருஷ்ணன் என்பவர், மதுபோதையில் சாலையில் செல்பவர்களிடம் ரகலையில் ஈடுபட்டார். அதனை போலீசார் தட்டிக் கேட்டபோது, தலைமைக் காவலர் முத்துக்குமரன் என்பவரின் சட்டையை பிடித்து நவகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com