Vellore News | மண்ணுக்குள் புதைந்த கிணறு - குடிநீரின்றி தவிக்கும் மக்கள்
வேலூர் மாவட்டம் நார்ச்சிமேடு கிராமத்தில், குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த கிணறு மண்ணுக்குள் புதைந்ததால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, நார்ச்சிமேடு கிராமத்தில், சுமார் 20 ஆண்டுகள் பழமையான கிணறு, அப்பகுதியினரின் குடிநீர் ஆதாரமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அந்த கிணறு திடீரென மண்ணுக்குள் புதைந்ததால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக வெகு தூரம் வனப்பகுதிக்குள் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால், மிகுந்த அவதியடைந்துள்ள மக்கள், இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
