கணவரை பிரிந்து ரவுடியுடன் குடும்பம் நடத்திய பெண் - பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கிய ரவுடி

கணவரை பிரிந்து ரவுடியுடன் குடும்பம் நடத்தி வந்த பெண், அந்த ரவுடி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால், அவனை மற்றொரு கள்ளக்காதலனோடு சேர்ந்து தீர்த்து கட்டியுள்ளார்.
கணவரை பிரிந்து ரவுடியுடன் குடும்பம் நடத்திய பெண் - பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கிய ரவுடி
Published on

வேலூர் காட்பாடி அருகே விருதம்பட்டு சர்கார் தோப்பு பகுதி பாலாற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது ரவுடி சுனிலின் சடலம்... ஆரம்பத்தில் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என எண்ணிய போலீசாருக்கு, மோப்ப நாய் புதிய திருப்பத்தை த‌ந்த‌து. சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அந்த வீட்டை காட்டி கொடுத்த‌து மோப்பநாய்... பூட்டப்பட்டிருந்த வீட்டை போலீசார் திறந்து பார்த்தபோது, வீடு முழுவதும் ரத்தக்கரை படிந்திருந்து கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த வீட்டில் இருந்த பெண்ணின் செல்போனை ஆய்வு செய்த போலீசார், கடைசியாக பேசிய மணிகண்டனை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில்தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த ரத்தக்கரை படிந்த வீட்டில் இருந்த பெண் பெயர் கோகிலா... இப்ராகிம் என்பவரது மனைவியான கோகிலாவுக்கு கணவரது நண்பர்கள் மணிகண்டன், மற்றும் ரவுடி சுனிலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது

கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து ரவுடி சுனிலுடன் வாழத் தொடங்கிய கோகிலாவுக்கு ஒரு கட்டத்தில் சுனிலின் பாலியல் துன்புறுத்தல் கோபத்தை தந்தது

தனது மற்றொரு கள்ளக்காதலன் மணிகண்டன் , அவரது நண்பர் சதீஸ்குமார் மற்றும் தனது தந்தையுடன் இணைந்து சுனிலை வீட்டிற்கு அழைத்து கோகிலா தீர்த்து கட்டியுள்ளார்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், உள்ளூருக்குள்ளே பதுங்கியிருந்து ஆட்டம் காட்டும் கோகிலா மற்றும் அவரது தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com