வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் காந்தி வேடத்தில் வேட்புமனு தாக்கல்

வேலூரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மகாத்மா காந்தி வேடத்தில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் காந்தி வேடத்தில் வேட்புமனு தாக்கல்
Published on

204-வது முறையாக தேர்தலில் வேட்புமனு தாக்கல் :

கின்னஸ் சாதனைக்காக 204-வது முறையாக தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்மராஜன், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.கின்னஸ் சாதனைக்காக, இதுவரை 204 முறை, தேர்தல்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார். தமக்கு வெற்றி மீது நாட்டம் இல்லை எனவும், தோல்வியை விரும்புவதாகவும் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com